Monday, October 3, 2011

காத்துக்கிடக்கிறேன் உன்னைக் காண....




காலையில் கண் விழித்ததும்
வந்துவிடுகிறது உன் நினைவு..
கனவில் கூட வருகிறாய் நீ
சில நாட்களில்


வேகமாய் குளித்து
ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்து
படியில் தொங்கியும் அலுவலகம் செல்கிறேன்
உன்னைக் காணும் ஆசையில்


காலையிலேயே உன்னைத் தேடிய
என் கண்களில் ஏமாற்றமே
கவலையுடனே தொடர்கிறேன்
என் வேலையை


அருகில் பணிசெய்யும் சிலர்
சினிமாவும் அரசியலும் சில கேலிகளும் பேச
என் நினைவில் நிற்பதோ
நீ மட்டுமே


இடைவேளையில் தேநீர் குடிக்கையில்
பார்த்தியா டா மச்சி என்று கேட்கும் நண்பனுக்கு
சோகமாக உதிர்க்கிறேன்
விரக்தியான பார்வையை


சோகமாக திரும்பிய எனக்கு
கொஞ்ச நேரத்திலேயே இன்ப அதிர்ச்சி
கிடைத்தது உன்னைக் காணும் வாய்ப்பு
அதுவும் மூன்று முறை


இன்றைய நாளுக்கான நிம்மதியோடு
சென்று அமர்ந்தேன் மதிய உணவு அருந்த
எதிரிலே இருந்த நண்பன் கேட்டான்
மச்சி...மூணு பக்(Bug) கண்டுபிடிச்சிட்டியாமே....


(உங்களில் ஒருவன்...Software Testers)

No comments:

Post a Comment